பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மீண்டும் உச்சம் தொட்ட டொலரின் பெறுமதி!
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது
மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட தினசரி மாற்று விகித அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 323.53 ரூபாவாகவும், விற்பனை விலை 331.15 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 5, 2023இற்கு பிறகு, டொலரின் பெறுமதி உச்சம் தொட்டது இதுவே முதல் முறையாகும்.





