இந்தியா செய்தி

நிச்சயம் வெல்வோம்: வலைத்தளங்களில் வைரலான சீமானின் பேச்சு!

“இன்று இல்லை என்றால், நாளை நிச்சயம் வெல்வோம்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி உறுப்பினர்களுடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

சீமான்கூட அவரது தொகுதியில் தோல்வியை எதிர்கொண்டார்.

இவ்வாறு தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ஆடியோ பதிவில் சீமான்,

“ நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். இன்றைக்கு இல்லை என்றால், நாளை வெல்வோம்.

அடுத்த 5 ஆண்டுகள் இருக்கிறது. களத்தில் நின்று வேலை பாருங்கள். மக்களோடு மக்களாக நில்லுங்கள். களத்தில் இருந்து வெளியேற வேண்டாம்.

திரைக்கவர்ச்சியை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள்.
அவரை (விஜய்) ஆட்சியில் உட்கார வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

தற்போது அவரது ஆட்சியில் வாழ்ந்து பார்ப்பார்கள் தானே. எனவே, அடுத்து நமக்குத் தான் வாய்ப்பு. தைரியமாக இருங்கள்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!