ஸ்டார்மரினால் மூன்று முக்கிய கொள்கை வாக்குறுதிகள் அறிவிப்பு
பிரதமர் Starmer ஆற்றிய உரை, தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த தலைமைச் சவாலை தடுக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.
அவர் “தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டதுடன், தன்னை சந்தேகிப்பவர்களை தவறென நிரூபிப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் அவர் தனது உரையில் மூன்று முக்கிய கொள்கை வாக்குறுதிகளை முன்வைத்தார்.
முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை வலுப்படுத்தி, பிரித்தானியாவை “ஐரோப்பாவின் மையத்தில்” வைத்திருக்க அரசாங்கம் முயற்சி செய்யும் என கூறினார்.
அடுத்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் “பிரித்தானியாவுக்கான புதிய திசை” அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாவதாக, British Steel நிறுவனத்தை முழுமையாக அரசுடைமையாக்கும் சட்டம் புதன்கிழமை கொண்டுவரப்படும் என அவர் அறிவித்தார். இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலனுக்கான நடவடிக்கை எனவும் அவர் விளக்கமளித்தார்.
மூன்றாவதாக, பிரித்தானிய இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை அவர் அறிவித்தார்.
ஐரோப்பாவில் பணிபுரியவும், கல்வி கற்கவும் வாய்ப்பு வழங்கும் இளைஞர் அனுபவத் திட்டம், தொழிற்பயிற்சி மற்றும் கல்வி முதலீடுகள் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
அதேபோல், வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை, பயிற்சி அல்லது பணி வாய்ப்பு “உத்தரவாதமாக” வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.





