இலங்கை செய்தி

யாழ். தையிட்டி வீதி விவகாரம்: மே 21 ஆம் திகதி தீர்ப்பு!

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி, தற்போது விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த வீதியை மீட்கும் நோக்குடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் காலக்கெடு விதித்திருந்தார்.

பிரதேச சபை வேலியை அகற்ற முற்படுவது இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எனத் தெரிவித்து, பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

எனினும், ஒருதலைப்பட்சமாக உத்தரவிட முடியாது என மறுத்த நீதிமன்றம், தவிசாளர் மற்றும் செயலாளரை முன்னிலையாகுமாறு இன்று அழைப்பு விடுத்திருந்தது.

இன்றைய விசாரணையின் போது வலி. வடக்கு தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

அவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பிரதேச சபையின் சட்டபூர்வமான அதிகாரம் மற்றும் பொது வீதியை மீட்க வேண்டியதன் அவசியம் குறித்துத் தனது வாதங்களை முன்வைத்தார்.

விகாராதிபதி இன்று மன்றில் முன்னிலையாகாத நிலையில், பொலிஸார் அவர் சார்பில் வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான், இந்த வழக்கின் மீதான இறுதித் தீர்ப்பு அல்லது கட்டளையை எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்குவதாகத் திகதியிட்டுள்ளார்.

பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பதில் ஏற்பட்டுள்ள இந்த சட்டப் போராட்டம், தையிட்டி பகுதியில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!