ஈரானின் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்!
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட தெஹ்ரானின் முன்மொழிவில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது, அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஈரான் மீண்டும் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் ஆகியவை அடங்கியிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானியப் பிரதிநிதிகளின் பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை – அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.
14 அம்சங்களைக் கொண்ட அமெரிக்க முன்மொழிவில், ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை நிறுத்துவது, தடைகளை நீக்குவது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற போக்குவரத்தை மீட்டெடுப்பது போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை தெஹ்ரான் புறக்கணித்து வருகிறது. இவ்விரு நாடுகளுகும் இடையிலான இந்த மோதல் போக்கு உலக நாடுகளை பாதித்துள்ளது.





