அமெரிக்காவின் முன்மொழிவுக்கு பதிலளித்தது ஈரான்!
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுக்கு ஈரான் தனது பதிலை அனுப்பியுள்ளது என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பதில் இன்று பாகிஸ்தானிய மத்தியஸ்தர் மூலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினம் ஈரான் வழங்கிய பதில் குறித்து விவரமாக தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), ஒரு மூத்த இராணுவத் தளபதியைச் சந்தித்துள்ளார். கடந்த சில நாட்களில் கமெனி நேரில் சந்தித்த இரண்டாவது சந்திப்பு இதுவாகும் என ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





