இலங்கை செய்தி

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ரஷ்யா ஆர்வம்!

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு செயலாளரும் ரஷ்ய தூதுவரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, குறிப்பாக பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!