ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானிய கடற்பரப்பில் ரஷ்ய உளவுக் கப்பல் : ஒரு மாதமாக பின்தொடரும் ரோயல் கடற்படை!

பிரித்தானியாவிற்கும்,  ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் முன்னணி போர்க்கப்பல்களில் ஒன்றை ரோயல் கடற்படைக் கப்பல்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகின்றன.

அட்மிரல் கிரிகோரோவிச் என்ற போர்க்கப்பல் பிரித்தானியாவின் கடற்கரைக்கு அப்பால் பயணித்தபோது, ​​HMS டைன், HMS மெர்சி மற்றும் HMS செவர்ன் ஆகிய ரோந்துக் கப்பல்களால் கண்காணிக்கப்பட்டது.

பதற்றமான இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதம் முழுவதும் நீடித்தது. கடந்த பத்தாண்டுகளில் ரோயல் நேவியால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் தீவிரமான பின்தொடர்தல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா  மீதான தனது அச்சுறுத்தலின் அளவை ரஷ்யா அதிகரித்துள்ள நிலையில், இந்த பின்தொடர்தல் நடவடிக்கை இராஜதந்திர உறவை மேலும் பாதித்துள்ளது.

அதேநேரம் ஐக்கிய இராச்சியத்திற்கு வடக்கே காணப்படும், முக்கியமான கடலடி தரவு மற்றும் ஆற்றல் கேபிள்களை ஆய்வும் உளவு பார்க்க அல்லது ஏதேனும் நாசவேலையை மேற்கொள்ள இந்த கப்பல் பயணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!