அரசியல் இலங்கை செய்தி

“மலையகத்துக்கு கூலிப்படை வேண்டாம்”: சபையில் மனோ காட்டம்

‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார்.

நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் நேற்று அறவழி போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே இன்று பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படையை உருவாக்க முடியாது. அது தடை செய்யப்பட வேண்டும்.

தோட்டங்களில் பயிரிடப்படாத தரிசு நிலங்களில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

மலையக மக்களுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறும் அவர் இடித்துரைத்தார்.

மலையக மக்களுக்கு காணி உரிமை தராமல், ஏனையோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமானால் தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் போராடும் என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!