பெரு பொதுத் தேர்தல் : சிறப்பு தணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் அழைப்பு!
பெருவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவு தொடர்பில் “விரிவான மற்றும் முழுமையான தகவல் தொழில்நுட்பத் தணிக்கை” நடத்த வேண்டும் என அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தேர்தலின் முதல் கட்டத்தின் இறுதி முடிவுகள் இன்னும் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 97.5% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையடையவில்லை.
ஜூன் மாதம் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில், பழமைவாத முன்னணியாளரான கெய்கோ ஃபுஜிமோரியை எதிர்கொள்ள, தெளிவான ஜனாதிபதி வேட்பாளர் யாரும் இன்னும் உருவாகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“தேர்தல் முடிவுகளின் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக” சுதந்திரமான தணிக்கைக்கு அவ் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.




