ட்ரம்பிற்கு எதிராக கூச்சலிடப்படும் எண்கள் – பின்னணி என்ன?
விமானப்படை முன்னாள் வீரரும், புளோரிடாவின் 16வது மாவட்டத்தின் நாடாளுமன்ற வேட்பாளருமான மார்க் டேவிஸ், தனது பிரச்சாரத்தில் “8647” என்ற சொற்றொடரின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
“8647” என்ற எண்கள், அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்ப்பவர்கள் பயன்படுத்தும் ஒரு பேரணி முழக்கமாக உருவெடுத்துள்ளன.
இதில் “86” என்பது பொதுவாக ஒன்றை அகற்றுவதையும், “47” என்பது டிரம்பின் அதிபர் எண்ணையும் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
“86 47” இடம்பெற்ற இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ஜேம்ஸ் கோமி ( James Comey) மீது நீதித்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதை ட்ரம்ப் ஒரு நேரடி அச்சுறுத்தலாகப் புரிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், “86” என்பது ஒருவரைக் கொல்வதைக் குறிக்கும் ஒரு கும்பல் சொல் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.





