அணுசக்தி ரகசியங்களை வழங்கியோருக்கு ஈரானில் மரண தண்டனை!
இஸ்ரேலின் மொசாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Yaqoub Karimpour மற்றும் Nasser Bekerzadeh ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளைப் பற்றிய ரகசியத் தகவல்களை இவர்கள் பகிர்ந்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான இந்த முக்கியமான விவகாரத்தில், நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டிற்கு கசியவிட்டதற்காக இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு உளவுவேலை செய்த மேலும் சிலருக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





