இந்தியா

சோலாரை பயன்படுத்த இந்திய மக்களுக்கு வலியுறுத்தல்!

வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டைப் பகல் நேரங்களுக்கு மாற்றுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  எரிசக்தி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ( Pralhad Joshi), இந்தியாவின் பாதிப்பு பெரும்பாலும் வணிக ரீதியான எல்பிஜி-யுடன் மட்டுமே தொடர்புடையது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இரவில் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, பகல் நேரங்களில் சமையல், வாகனங்களை சார்ஜ் செய்தல் மற்றும் உபகரணங்களை இயக்குதல் போன்றவற்றுக்காக மலிவான சூரிய சக்தியைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதில்தான் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

மாலை 5 மணிக்கு முன்பாக இதை மாற்ற முடிந்தால், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக எரிசக்தி பயன்பாட்டை மாற்றுவது நமது இறக்குமதிக் குறைப்பிற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கூரைகளில் சூரிய சக்தி (சோலார்) நிறுவுமாறு வலியுறுத்திய அவர், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக எரிசக்தி பயன்பாட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!