செய்தி விளையாட்டு

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

இறுதி பந்துவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர்வரை சென்றது.

லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் (42) மற்றும் ஆயுஷ் பதோனி (24) சிறந்த அடித்தளம் அமைத்தனர்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு சுனில் நரைன் பந்துவீசினார்.

நரைனின் சுழலில் சிக்கிய நிக்கோலஸ் பூரன் மற்றும் எய்டன் மார்க்ரம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, லக்னோ அணியால் வெறும் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

வெறும் 2 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ரிங்கு சிங் அடித்த பவுண்டரியின் மூலம் முதல் பந்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி