ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் – ட்ரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் 

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று பிற்பகல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்

வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, ட்ரம்புக்கு தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார் என டவுனிங் தெரு அறிவித்துள்ளது.

அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகவும், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு, மத்திய கிழக்கு நிலைமை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

அதனுடன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டிய அவசரத் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!