செய்தி விளையாட்டு

உலக்கிண்ண தொடரில் இருந்து ஈரானை நீக்குமாறு ட்ரம்பின் தூதுவர் யோசனை!

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை இணைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான பாலோ ஜாம்போலி Paolo Zampolli கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இவர் ட்ரம்பின் மிக முக்கிய சகாக்களில் ஒருவராகக் அறியப்படுகின்றார்.

ஊலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளில் அமெரிக்காவில் இருந்து மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் FIFA ஈரான் கோரி இருந்தது.

இதனை ஏற்கவில்லை. எனினும், ஈரான் உலக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என FIFA அறிவித்திருந்தது. தமது அணி விளையாட தயாராகிவருகின்றது என ஈரான் தரப்பில் இருந்தும் நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையிலேயே Paolo Zampolli மேற்படி கோரிக்கையை முன்வைத்து, அது தொடர்பில் FIFA தலைவருக்கு கடிதமும் அனுப்பி வைத்துள்ளார்.

உலகக்கிண்ண தொடருக்கு இம்முறை இத்தாலி தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!