உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் 

 

ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் ஏற்றிய இந்தியக் கொடியேற்றிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் “சன்மார் ஹெரால்டு” என அடையாளம் காணப்பட்ட அந்தக் கப்பலும், அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதே நாளில் சுமார் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா, ஈரானின் தூதுதரை வரவழைத்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்னதாக, ஹார்முஸ் நீரிணையை திறப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

அதேவேளை, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியது.

பின்னர், சில கப்பல்கள் நீரிணையை கடந்து சென்றதாகவும், அதன் பின்னர் ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கப்பல் போக்குவரத்து தரவுகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!