இஸ்ரேல் மக்கள் அதிருப்தி!லெபனானில் கொண்டாட்டம்!!
லெபனான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் திடீரென ஏற்றுக்கொண்டது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைதி ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்குச் சற்று முன்பாகக்கூட, வடக்கு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதால் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு மக்கள் சந்தேகத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறார்கள்.
இந்த உடன்படிக்கை தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிரானது என்றும், இது எல்லையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
பாதுகாப்பற்ற சூழலில் தங்களை அரசு கைவிட்டுவிட்டதாகப் பொதுமக்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது இஸ்ரேலியர்களிடையே நிலவும் கடுமையான அரசியல் மற்றும் பாதுகாப்பு கவலைகளை எடுத்துரைக்கிறது.
அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தத்தை லெபனான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இடம்பெயர்ந்தவர்கள் தமது வீடுகளை நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளனர்.





