இலங்கை

திருகோணமலையில் சமாதான நீதவான்கள் சங்கக் கிளை அங்குரார்ப்பணம்!!

திருகோணமலையில் சமாதான நீதவான்கள் சங்கக் கிளை அங்குரார்ப்பணக்கூட்டம்
இன்று (16) திருகோணமலை உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தின் மாநாட்டு மணடபத்தில் வைத்தியர் என்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட சமாதான நீதவான்களது கடமைகள் பொறுப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எம்மால் முடிந்தவரை மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு அனைத்து அங்கத்தவர்களும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் எனவும் இதன்போது  வைத்தியர்  என். ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் சமாதான நீதவான்களது நன்மைகள் பற்றி இதுவரை யாரும் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை.

இலங்கை சமாதான நீதவான்களாக நாம் இயங்கும்போது எமது கடமைகளை சரிவரச் செய்வதாயின் எமது பிரச்சனைகளை கலந்தாலோசித்து வழிநடாத்துவதற்கு ஒரு ஊடகம் அல்லது ஒரு மேடை தேவை என்பதனால் இம்முயற்சியை எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை சமாதான நீதவான்கள் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையின் அங்குரார்ப்பண கூட்டத்தில் பின்வருவோர் புதிய நிருவாகத்தின் பணிப்பாளர் சபையினர் தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவராக டொக்டர் என். ரவிச்சந்திரன் செயலாளர் திரு டீ. சதீசன்
பொருளாளர் திரு. ஆர். கலைச்செல்வன்
உபதலைவர் திரு. எம்.வை.எம். சமீர்
உப செயலாளர் திரு. ஜி. சுகுமார்

பணிப்பாளர்கள் அங்கத்துவ விருத்தி திரு. எஸ். சர்வேஸ்வரன்
உதவி அங்கத்துவ அபிவிருத்தி திருமதி
எம். பீ. ரோகினி மல்லிகா
ஊடக விவகாரம் அப்துல்சலாம் யாசீம்.
கலாச்சார அலுவல்கள் எம். என். சபியுல்லா
சமூக செயற்திட்டங்கள் திருமதி.
வ. பாலசாமுண்டீஸ்வரி
கல்வி விவகாரம் திரு எம். எஸ் வதூத்
நிதி அபிவிருத்தி என். ரட்ணவடிவேல்

கணக்காய்வாளர் எஸ். சுபேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!