இந்தியா செய்தி

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கவிடாது தடுப்பவர்களை காலம் மன்னிக்காது – மோடி

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கவிடாது தடுப்பவர்களை காலம் மன்னிக்காது – என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு திருத்த சட்டமூலம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 சட்டமூலங்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றி போதே பிரதமர்   இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்திய நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தேசத்தின் முக்கிய தருணத்தில் நானும் உள்ளேன் என்பதில் பெருமை.

மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டமூலம் என்பது காலத்தின் கட்டாயம்.
பெண் சக்திக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய வழி காட்டுகிறோம்

இத்தகைய முக்கிய சட்டமூலத்தை நிறைவேற்ற கிட்டியுள்ள வாய்ப்பு நமது பாக்கியம்.

சட்டமூலத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை மகளிர் மன்னிக்க மாட்டார்கள். பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை தடுப்பவர்களை காலம் மன்னிக்கவே மன்னிக்காது.

எதிர்க்கட்சியினர் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து, பொதுவெளியில் எதிர்ப்பு தெரிவிக்கின்றன” என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!