இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதன்போது மகாநாயக்க தேரர், செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரைச் சந்தித்து, சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!