இத்தாலி பிரதமர் கோழை: ட்ரம்ப் காட்டம்
இத்தாலி பிரதமர் Giorgia Meloni தைரியமற்றவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இத்தாலி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது.
அதேபோல திருத்தந்தை தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு இத்தாலி பிரதமர் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கினால் அது இத்தாலிக்கே ஆபத்தாக முடியும் என்பதை Giorgia Meloni உணரவில்லை என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.





