ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை விரும்பும் ட்ரம்ப்!
ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகின்றார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி J.D. Vance தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நம்பிக்கையின்மையை ஒரே இரவில் போக்கிவிட முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
வெறும் சிறிய அளவிலான உடன்படிக்கைகளைச் செய்யாமல், மிக முக்கியமான மற்றும் விரிவான மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தையே டிரம்ப் இலக்காகக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் துணை ஜனாதிபதி J.D. Vanceசுட்டிக்காட்டியுள்ளார்.





