பயோமெட்ரிக் சோதனையால் பெரும் அவலம்-பிரித்தானியாவுக்கு திரும்ப ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவு
EasyJet விமானத்தில் பயணிக்க முயன்ற பலர், விமானத்தை தவறவிட்டதால் பிரித்தானியாவுக்கு திரும்ப ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இத்தாலியின் மிலான் லினேட் விமான நிலையத்தில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் நோக்கி புறப்பட இருந்த விமானத்தை 100 க்கும் மேற்பட்ட பயணிகள் தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்திய புதிய நுழைவு–வெளியேறு முறை (Entry-Exit System – EES) காரணமாக எல்லை கட்டுப்பாட்டு சோதனைகளில் கடும் தாமதம் ஏற்பட்டதாக பயணிகள் கூறுகின்றனர்.
புதிய முறையின் கீழ், பயோமெட்ரிக் மற்றும் முக அடையாள சரிபார்ப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் நீண்ட வரிசைகள் உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பயணிகள் மயக்கம் மற்றும் சுகயீனம் போன்ற நிலைகளுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
பயணிகள் இந்த அனுபவத்தை “மிகவும் பயங்கரமானது” என விவரித்துள்ளனர். மற்றொரு பயணி மேக்ஸ் ஹியூம், பிரித்தானியாவுக்கு திரும்ப
£1,800 செலவழிக்க வேண்டியதாக தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனம் இந்த நிலையை “ஏற்றுக்கொள்ள முடியாத தாமதம்” என விமர்சித்துள்ளது.





