உக்ரைன் – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்!
ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக, உக்ரைனும் ரஷ்யாவும் நேற்று தலா 175 போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொண்டுள்ளன.
இந்தப் பரிமாற்றத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ரஷ்யச் சிறையிலிருந்து 175 ராணுவ வீரர்களையும் ஏழு பொதுமக்களையும் உக்ரைனுக்கு அழைத்து வந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்தார்.
உக்ரேனிய பாதுகாப்பு உளவுத்துறைப் பிரதிநிதியான ஆண்ட்ரி யூசோவ், விடுவிக்கப்பட்டவர்களில் 163 பேர் 2022 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.





