உலகம் செய்தி

மீண்டும் களமிறங்குகிறார் Kamala Harris!

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் கமலா ஹாரிஸ் Kamala Harris தீவிரமாக ஆலோசித்துவருகின்றார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையில் இரு முனை போட்டி நிலவியது.இதில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலையும் டிரம்ப் நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார் கமலா ஹாரிஸ்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஈராண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், அதில் போட்டியிடும் விருப்பத்தை கமலா ஹாரிஸ் முன்கூட்டியே வெளியிட்டுள்ளமை ஒரு திருப்பமாக பார்க்கப்படுகின்றது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் விருப்பப்பட்டியலில் அவர் முன்னிலையில் இருந்தாலும், வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இன்னும் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!