விளையாட்டு

வெற்றிநடைபோடும் Rajasthan Royals!

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற 16 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் தலைவர் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு Royal Challengers Bengaluru அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பில் சால்ட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி (32) நிதானமாக ஆட முயன்ற போதிலும், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் 94 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த RCB அணியை, கேப்டன் ரஜத் பாட்டிதார் (63 ஓட்டங்கள்) மற்றும் இம்பாக்ட் பிளேயர் வெங்கடேஷ் ஐயர் (29 ஓட்டங்கள்) ஆகியோர் மீட்டெடுத்தனர்.

இதன் பலனாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 என்ற இலக்கை எட்டியது.

202 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தார்.

வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ஓட்டங்கள் விளாசித்தள்ளினார்.

துருவ் ஜூரல் 43 பந்துகளில் 81 ஓட்டங்களைப்பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, ராஜஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே 202 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!