நீண்ட கால மௌனத்திற்கு பிறகு ஈரானுடன் ஜேர்மன் நேரடி பேச்சுவார்த்தை
ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ், நீண்ட கால மௌனத்துக்குப் பிறகு, ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை
மீண்டும் தொடங்கியதாக தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து நடைபெறும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டு, சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் முயற்சிகளில் ஜெர்மனி பங்களிக்கும் என்றும் ஜெர்மனி ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு முழு நாகரிகத்தையும் அழிக்க நினைக்கவில்லை என்றும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், லெபனானில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் கவலைக்குரியவை என்றும்,
இது உலக அமைதியை பாதிக்கக் கூடாது என்றும் மெர்ஸ் வலியுறுத்தினார்.





