இலங்கை செய்தி

அன்னை பூபதி நினைவு ஊர்தி நல்லூரில் இருந்து ஆரம்பம்!

அன்னை பூபதியின் 38ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி பயணம் இன்று (9) நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமானது.

இந்த ஊர்தி வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

1932 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த அன்னை பூபதி, தனது 56ஆவது வயதில் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்தார்.

விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில்,

1.உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988, மார்ச் 19ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அம்னை பூபதி ஆரம்பித்தார்.

1988 ஏப்ரல் 19 ஆம் திகதி அவர் உயிர் தியாகம் செய்தார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!