கியூபாவுக்காக வவுனியாவில் கையெழுத்து வேட்டை!
கியூபாமீது அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கையில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன்ஓர் அங்கமாக வவுனியா, இலுப்பையடியில் இன்று (09) பொது மக்களிடம் கையொப்பம் திரட்டப்பட்டது.
கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கமும், சமூக வெகுஜன அமைப்பும் இணைந்தே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.
இதன்போது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.






