இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. விசனம்!
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் Antonio Guterres வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் குறித்த இராணுவ நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தாக்குதலை உடன் நிறுத்துமாறு அவர வலியுறுத்தியுள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய உக்கிர தாக்குதலில் 250 பேர்வரை பலியாகியுள்ளனர்.





