விளையாட்டு

இறுதி பந்துவரை பரபரப்பு: போராடி தோற்றது டெல்லி!

Delhi Capitals மற்றும் Gujarat Titans ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

IPL 2026 தொடரின் 14 ஆவது லீக் ஆட்டம் அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Delhi Capitals தலைவர் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

குஜராத் அணியின் தலைவர் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களையும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ஓட்டங்களையும் விளாசினர்.

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றது.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார்.

கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!