மிரட்டல்களுக்கு அடிப்பணியாத ஈரான் – மரண தண்டனைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு விதித்த காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இருப்பினும் ஈரான் ட்ரம்பின் கோரிக்கைக்கு அடிப்பணியவில்லை. இந்நிலையில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தப்படி ஈரானின் கட்டுமானங்கள் மீது தாக்குதல் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஹார்மூஸ் ஜலசந்தி குறித்த விவாதம் இன்று ஐ.நா சபையில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், எதிரிகளுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக, மரணதண்டனைகள் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஈரானின் நீதித்துறைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி





