ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ட்ரம்ப்: நியூசிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!
ஈரானின் பொதுமக்கள் கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவது தேவையற்றது மற்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தற்போதைய சூழலில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, மோதல்கள் பரவாமல் தடுப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மீள திறப்பு, உடன்பாட்டுக்கு வருதல் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈரான் இணங்காவிட்டால் அந்நாடுமீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து காலக்கெடு விதித்துள்ளார்.
குறித்த காலக்கெடு அமெரிக்கா நேரப்படி இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது. இலங்கை நேரப்படி நாளை காலை 5.30 இற்கு முடிகின்றது.





