சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இந்தியா கையில் எடுத்துள்ள புதிய அணுகுமுறை!
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, வங்கதேசத்துடனான தனது ஆற்று எல்லைப் பகுதியில் விஷப் பாம்புகளையும் முதலைகளையும் பயன்படுத்த இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4,096 கி.மீ நீளமுள்ள எல்லையின் சதுப்பு நில, வேலியிடப்படாத பகுதிகளில் பௌதீகத் தடைகளை அமைப்பதற்கு மாற்றாக இந்த நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.
மார்ச் 26 என திகதியிடப்பட்ட, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு உள் குறிப்பாணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த திட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திட்டத்துடன் ஒத்துப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி திட்டமானது மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில், முக்கியமாக சுமார் 175 கி.மீ எல்லையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




