ஈரானிலுள்ள கல்வி நிறுவனங்கள் இலக்கு வைப்பு!
அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்தத் தாக்குதலின் விளைவாக நகரின் சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தலைநகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் உள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் ஈரான் தலைநகரில் பெரும் பாதிப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன.





