03 மணிநேரத்தில் 148 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்! ரஷ்யாவில் மின்துண்டிப்பு!
உக்ரைன் இராணுவம் இன்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுமார் 03 மணிநேரத்தில் 148 ட்ரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட மின்வெட்டுகளால் அரை மில்லியன் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகாலக் குழுவினர் மின்சாரத்தை மீட்டெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் (Belgorod) இந்த தாக்குதல்கள் முனனெடுக்கப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினமும் 148 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்ட நிலையில், அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





