ஈரானின் கோரிக்கையை ஏற்குமா FIFA?
2026 கால்பந்து உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அமெரிக்காவில் தமது அணி பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை FIFA ஏற்றால் மட்டுமே தமது அணி உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாகக் கருதும் ஈரான், வீரர்களின் பாதுகாப்பு குறித்த உறுதியான வாக்குறுதியை எதிர்பார்க்கிறது.
இந்த விவகாரத்தில் FIFA வின் (International Federation of Association Football) இறுதிப் பதிலைப் பொறுத்தே ஈரானின் இறுதி முடிவு அமையவுள்ளது.





