உலகம் செய்தி

அடிபணிய ஈரான் மறுப்பு: ட்ரம்பின் கோரிக்கை நிராகரிப்பு!

மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம் எனக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஈரான்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், புதிய உடன்படிக்கையை எட்டுவதற்கும் 48 மணிநேரக் கெடுவை அமெரிக்க ஜனாதிபதி நேற்று விதித்திருந்தார்.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 10 நாள் கெடு முடியும் நிலையிலேயே மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவிற்குள் இணங்காவிட்டால் ஈரானின் முக்கியக் கட்டமைப்புகளைத் தகர்த்து, கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி எச்சரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்ததோடு, டிரம்பின் கருத்தை அறிவற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், இதற்குப் பதிலடியாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!