அரசியல் இலங்கை செய்தி

10 ஆம் திகதி பலப்பரீட்சை! தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி SJP, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும், வடக்கு, கிழக்கை மையப்படுத்தி இயங்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இது தொடர்பில் அக்கட்சிகள் தீர்மானம் எடுக்கவுள்ளன.

அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், அதன் தெரிவுகளை இன்னும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் அரசு வசம் உள்ளது.

எனினும், நிலக்கரி மோசடி உள்ளிட்ட விடயங்களை அம்பலப்படுத்தும் நோக்கிலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சிலவேளை, விவாதத்துக்கு முன்னர் எரிசக்தி அமைச்சர் பதவி விலகுவதற்குரிய சாத்தியமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!