இந்திய கடற்படைக்கு 3 ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
ஐஎன்எஸ் அரிதாமன் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி நீர்மூழ்கி கப்பல் 7,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தும் இந்த நீர்மூழ்கி கப்பலில் 90 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் பயணிக்கும்.
இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட்
மற்றும் ஐஎன்எஸ் அரிகட் நீர்மூழ்கி கப்பல்களை விட, இந்த கப்பல் 2 மடங்கு சக்தி வாய்ந்தது. இதில் ஏவுகணைகள் ஏவுவதற்கு 8 ட்யூப்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கப்பலில் உள்ள அணு ஏவுகணை கடலுக்கடியிலிருந்து வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.





