ஐரோப்பா செய்தி

ஹார்முஸ்  பதற்றம் – ஈரானை குற்றம் சுமத்தும் பிரித்தானியா

ஹார்முஸ் நீரிணையில் இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாட்டில், பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ஈரான் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையைத் தடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த காணொளி மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. வளைகுடா கடல் பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கூட்டணியை அமைப்பதற்கான தொடக்கமாக இது கருதப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பதிலடியாக ஈரான் பல கப்பல்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக எரிசக்தி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்த நடவடிக்கைகள் ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பிராந்தியங்களின் வர்த்தகத்தை பாதிப்பதாகவும், உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூப்பர் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்தக் கடற்பாதையை மீண்டும் திறக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!