இலங்கை

ஆழ்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின்!

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இன்று (01) காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,  சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும்,  அதிலிருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப் போதைப்பொருளானது, சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!