8,300 மாணவர்களுக்கு 3 ‘A’ சித்திகள்!
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





