இலங்கை செய்தி

அனைத்து வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அதாவது அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை (1) மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், வாராந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கமைய எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாயின் (1,3,5,7,9) ஒற்றை இலக்க நாட்களிலும், இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாயின் (2,4,6,8,0) இரட்டை இலக்க நாட்களிலும் எரிபொருள் வழங்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!