ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு அமெரிக்கா வசமாகுமா?
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் தன் வசம் வைத்துள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி டாம் ஷார்ப் Tom Sharpe தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இப்பகுதியை இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மீட்க முயற்சிப்பது தற்போதைய நிலையில் சாத்தியமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஈரான் தானாக முன்வராத வரை, வெளிநாட்டு தலையீடுகள் அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா தயாராகிவரும் சூழ்நிலையிலேயே Tom Sharpe மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.





