“பாம்பு தீண்டி 431 பேர் பலி”!
இந்தியாவில் பாம்பு தீண்டி கடந்த வருடம் மாத்திரம் 431 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் வழங்கியுள்ள பதிலில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு 183 பேர் உயிரிழந்தனர். 2024 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 370-ஆக உயர்ந்து. 2025-ல் 431 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனவும் மேற்படி பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில வாரியான புள்ளி விவரங்களின்படி, கர்நாடகத்தில் தான் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.





