இலங்கை செய்தி

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ Andrey Rudenko இன்று (31) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் கொழும்பு வருகின்றார்.

இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதியையும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அவர் ரஷ்யா திரும்பிய நிலையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று கொழும்பு வருகின்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!