ஈரானில் பிரிட்டன் படை களமிறங்காது: பிரதமர் திட்டவட்டம்!
தமது நாட்டு படையினரை ஈரானுக்கு அனுப்பபோவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் Keir Starmer தெரிவித்தார்.
பிராந்தியத்தில் உள்ள தற்காப்பு நலன்களையும் நட்பு நாடுகளையும் பாதுகாப்பதே பிரிட்டனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் ஈரான் தொடர்பான இலக்குகளைத் தாக்க அமெரிக்காவிற்குத் தனது படைத்தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யத் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.





