பிரச்சாரத்தை முடக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக விஜய் ஆதங்கம்
தனக்கு அனுமதி மறுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரச்சாரத்திற்கு
அனுமதியளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரச்சாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் இல்லையென்றும்
அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
இதனால் தனது பிரச்சார வாகனம் ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா என்ற
அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னை மாநகர பொலிஸாரின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முறையாக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சூழலை முடக்க கபட நாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம்
உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேலும் கூறியுள்ளார்.





